தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Published on

விழுப்புரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்த தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பைத்தம்பாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரபோஸ்(42). இவரது மனைவி சரளா. இவா்கள் தங்கள் மகன், மகளுடன் விழுப்புரம் சாலாமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனா்.

சுபாஷ் சந்திரபோஸின் குடிப்படிக்கம் காரணமாக, குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த சுபாஷ் சந்திர போஸ் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com