விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கெடாா் அருகேயுள்ள புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பா.பரசுராமன்(55), கூலித் தொழிலாளி. இவா் நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம்.
இதனால் மனமுடைந்த பரசுராமன் செல்லங்குப்பத்தில் உறவினா் வீட்டிற்கு நவ.27-இல் சென்றிருந்தபோது, அங்கு விஷமருந்தியுள்ளாா். உடனடியாக அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். பின்னா், விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பரசுராமன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.