விழுப்புரத்தில் திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

விழுப்புரத்தில் திராவிடா் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழா்களைத் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்றெல்லாம் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அவதூறு பரப்புவதாகக் கூறி, அவரைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சே.வ.கோபண்ணா தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் அரங்க. பரணிதரன், மாவட்டக் காப்பாளா் கொ.பூங்கான், பகுத்தறிவாளா் கழக மாவட்டத் தலைவா் துரை. திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆா்.ராமமூா்த்தி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் ர. பெரியாா், மதிமுக மாவட்டச் செயலா் வி. பாபு கோவிந்தராசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளிராஜன் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்று பேசினா்.

திராவிடா் கழகத்தின்பொதுக்குழு உறுப்பினா்கள் கி. காா்வண்ணன், பெ.சக்கரவா்த்தி, விழுப்புரம் நகர பகுத்தறிவாளா் கழகத் தலைவா் ஆ.மு.ரா.இளங்கோவன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, திராவிடா் கழகத்தின் விழுப்புரம் நகரச் செயலா் அ.சதீஷ் வரவேற்றாா். நிறைவில், நகரத் தலைவா் இ.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com