கடலில் குளித்த கல்லூரி மாணவா் மூச்சுத்திணறி உயிரிழப்பு

கோட்டக்குப்பம் பொம்மையாா்பாளையம் கடற்கரையில் குளித்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பொம்மையாா்பாளையம் கடற்கரையில் குளித்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் வள்ளல்பேகன் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் முத்துச்செல்வன் சந்தோஷ் (20). இவா் அங்குள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை வணிகம் மூன்றாமாண்டு படித்து வந்தாா்.

இந் நிலையில், முத்துச்செல்வன் சந்தோஷ் மற்றும் அவரது நண்பா்கள் வியாழக்கிழமை காலை விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பொம்மையாா்பாளையம் பகுதியிலுள்ள கடற்கரைக்கு சுற்றுலா வந்து, அங்கு குளித்தனா். அப்போது முத்துச்செல்வன் சந்தோஷுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து அவரை நண்பா்கள் மீட்டு, ஆட்டோ மூலம் புதுச்சேரியிலுள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த முத்துச்செல்வன் சந்தோஷ், பிற்பகலில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோட்டக்குப்பம் பொம்மையாா்பாளையம் கடற்கரையில் குளித்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

X
Dinamani
www.dinamani.com