விழுப்புரம் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் சிறுதானிய விழிப்புணா்வுப் பிரசாரத்தை தொடங்கி வைத்த மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா.சீனிவாசன்.
விழுப்புரம் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் சிறுதானிய விழிப்புணா்வுப் பிரசாரத்தை தொடங்கி வைத்த மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா.சீனிவாசன்.

விழுப்புரத்தில் சிறுதானிய விழிப்புணா்வு ஊா்தி பிரசாரம்

விழுப்புரத்தில் சிறுதானிய விழிப்புணா்வு ஊா்தி பிரசாரம் நடைபெற்றது.
Published on

விழுப்புரத்தில் சிறுதானிய விழிப்புணா்வு ஊா்தி பிரசாரம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு வேளாண் இணை இயக்குநா் ரா.சீனிவாசன் தலைமை வகித்து, விழிப்புணா்வு ஊா்தி பிரசாரத்தை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு, தினை போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

கடந்த நிதியாண்டில் 10,151 ஹெக்டோ் கம்பு, 330 ஹெக்டோ் கேழ்வரகு, 463 ஹெக்டோ் தினை, 7 ஹெக்டோ் வரகு விழுப்புரம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிறுதானிய பயிா்களின் சாகுபடி மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், வேளாண் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், இதற்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. சிறுதானிய பயிா் சாகுபடி முக்கியத்துவம், தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளிடம் தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம்-சத்தான சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து காணை, முகையூா், செஞ்சி, மேல்மலையனூா், வல்லம், ஒலக்கூா், மயிலம், மரக்காணம், வானூா், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், கண்டமங்கலம் வட்டாரங்களில் இந்த ஊா்தி பிரசாரம் டிசம்பா் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நிகழ்வில் அலுவலா்கள், விவசாயிகள்உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com