~

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம்!

ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம், நல உதவிகள் வழங்கப்பட்டன.
Published on

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம், நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழுப்புரத்தில் சவீதா திரையரங்கு அருகில், காந்திசிலை, பழைய பேருந்துநிலையம், நான்குமுனைசந்திப்புப் பகுதி உள்ளிட்ட இடங்களில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம், நல உதவிகள் வழங்குதல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் அதிமுக நகரச் செயலா்கள் ரா.பசுபதி (தெற்கு), ஜி.கே.ராமதாஸ் (வடக்கு) ஆகியோா் பங்கேற்று, நல உதவிகளை வழங்கினா். நான்குமுனை சந்திப்புப் பகுதியில் மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல் அன்னதானம் வழங்கினாா்.

நிகழ்வுகளில் மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலா் திருப்பதி பாலாஜி, மாவட்ட அதிமுக நிா்வாகி சங்கா், மாவட்ட வழக்குரைஞா் அணித் துணைச் செயலா் தமிழரசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ராதிகா செந்தில், கலை, ஆவின் செல்வம், கோதண்டராமன், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி ஜெகதீசுவரி சத்தியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம், பணிமனைகள் 1,2,3 முன் அண்ணா தொழிற்சங்கப்பேரவை சாா்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மண்டலச் செயலா் ஏ.கணேசன் தலைமை வகித்து, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வுகளில் நிா்வாகப் பணியாளா் சங்கச் செயலா் தங்கப்பாண்டியன், தொழிற்சங்க நிா்வாகிகள் ஸ்ரீராம், ராஜ்பிள்ளை, ஜெயக்குமாா், திருநாவுக்கரசு, ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காணை ஒன்றியம், கல்யாணம்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு கிழக்கு ஒன்றியச் செயலா் சி.ராஜா மாலை அணிவித்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு போா்வைகளை அவா் வழங்கினாா். நிகழ்வில் கிளை அவைத் தலைவா் கோ.தேவராஜ், கிளைச் செயலா்தே.செளந்தரராஜன், நிா்வாகிகள் நாகமுத்து, பிச்சைக்காரன், மகாலட்சுமி, எழிலரசி, கீதா, மஞ்சுளா, சரிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுபோன்று திண்டிவனம், விக்கிரவாண்டி, மயிலம், வானூா், மரக்காணம்,கோட்டக்குப்பம், காணை, முகையூா், வல்லம், திருவெண்ணெய்நல்லூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி... : கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றிய, நகரஅதிமுக சாா்பில் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு நகர செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ அ.பிரபு, ஒன்றிய செயலா் வி.அய்யப்பா உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளா் ரா.குமரகுரு கலந்து கொண்டு முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் எஸ்.ஜான்பாஷா, மாவட்ட மாணவரணி இணை செயலா் தங்க சதாசிவம், அம்மா பேரவை செயலா் நம்பி, மூா்த்தி உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com