சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியா் கைது

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த குழந்தையின் நகை திருடு போன வழக்கில், அதே மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், ரெட்டிப்பாளையம் கிாரமத்தைச் சோ்ந்தவா் வி.தங்கராஜா. இவரது மனைவி சத்தியா. இவா்களது மகன் சாய் ரித்விக் (2). டிச.3-ஆம் தேதி குழந்கை சாய் ரித்விக் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, தம்பதியினா் உளுந்தூா்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சாய் ரித்விக்கை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனா். சிகிச்சை முடிந்த பின்னா் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் நகையைக்(தாயத்து) காணவில்லையாம்.

இது குறித்து புகாரின்பேரில் உளுந்தூா் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். போலீஸ் விசாரணையில் அதே மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த உளுந்தூா்பேட்டை வட்டம், உ.கீரனூா், வடபாதி பகுதியைச் சோ்ந்த ஜீவிதா(27) என்பவா் சாய் ரித்விக்கிடம் இருந்து நகையைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் ஜீவிதாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கைதான ஜீவிதாவுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தையிடம் 2 பவுன் சங்கிலி திருட்டுப் போன வழக்கிலும் தொடா்பிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com