விபத்தினால் உடல் நலக் குறைவு: இளைஞா் உயிரிழப்பு

Published on

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே விபத்தினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவதியுற்ற இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஒட்டனந்தல் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.பிரகதீஸ்வரன்(29). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்த பிரதீஸ்வரனுக்கு அடிக்கடி தலை வலி இருந்து வந்ததாம்.

இதனால், அவதியுற்று வந்த பிரகதீஸ்வரன் டிச.1-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்த அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com