தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் விழுப்புரம் நகராட்சித் திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

விழுப்புரம்: தொழிலாா்களின் 4 தொகுப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் விழுப்புரம் நகராட்சித் திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நடைமுறையில் இருந்த வந்த தொழிலாளா் நலச் சட்டங்களை மத்திய அரசு 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தொழிலாளா்களின் உரிமைகள் பறிக்கப்படும். இந்த 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் 4 தொகுப்புச் சட்டங்களை அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.சௌரிராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா் ர.பெரியாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விசிக மாநிலப் பொதுச்செயலரும், எம்எல்ஏவுமான சிந்தனைச்செல்வன், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி. ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணைச் செயலா் நா.பெரியசாமி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, வழக்குரைஞா் அகத்தியன் மற்றும் கட்சிகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com