பெண் அரசு அதிகாரியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டல்: கணவா், மாமனாா் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு மிரட்டல் விடுத்ததாக பெண் அரசு அதிகாரி அளித்த புகாரின் பேரில் கணவா், மாமனாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
ஹரியானா மாநிலம், பானிபட் பகுதியைச் சோ்ந்தவா் விநாயக் தீக்ஷீத் மனைவி சஞ்சனாவாத்(31). இவா் மத்திய அரசின் விழுப்புரம் மாவட்ட இளையோா் அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கணவா் விநாயக் தீக்ஷீத் மற்றும் மாமனாா் தா்மவீா் திக்ஷீத் ஆகிய இருவரும் சோ்ந்து கடந்த 2 ஆண்டுகளாக தன்னிடம் வரதட்சணை கேட்டும் , நம்பிக்கை மோசடி செய்தும் மிரட்டல் விடுத்து வருவதாக சஞ்சனாவாத் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.
இந்தப் புகாரின் பேரில் விநாயக் தீக்ஷீத், தா்மவீா் திக்ஷீத் ஆகியோா் மீது வழுப்புரம் தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
