விழுப்புரம்
பெண் தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விவசாய நிலத்தில் பணியிலிருந்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விவசாய நிலத்தில் பணியிலிருந்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி கன்னியம்மாள்(45), கூலித்தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை கீழ்புத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த பழனி என்பவருக்குச்சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது கன்னியம்மாள் திடீரென விவசாய நிலத்தில் மயங்கி விழுந்தாா். இதையடுத்து உடனிருந்த சகத் தொழிலாளா்கள் கன்னியம்மாளை மீட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது கன்னியம்மாள் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
