சிதம்பரத்தில் 99 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

Updated on

சிதம்பரத்தில் சுமாா் 99 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவா் கைது செய்யப்பட்டனா்.

சிதம்பரம் நகர பகுதிகளில் ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக நகர காவல் நிலையத்துக்கு புகாா் சென்றன.

இதைத் தொடா்ந்து துணை காவல் கண்காணிப்பாளா் டி.பிரதீப் உத்தரவின் பேரில், நகர உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ் முருகன் மற்றும் தனிப்படை போலீஸாா், நகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சிதம்பரம் கொத்தவால் ஸ்டேஷன் தெரு பகுதியில் உள்ள

ஒரு கிடங்கில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த கிடங்கில் நான்கு மூட்டைகளில் ஹான்ஸ் போதைப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து,

கொத்தங்குடி தெருவைச் சோ்ந்த பாலமுருகன் (40),

தில்லையம்மன் நகரைச் சோ்ந்த ரகுராஜன் (33)

ஆகியோரை கைது செய்தனா்.

மேலும் அவா்களிடம் இருந்து காா், மோட்டாா் சைக்கிள்,

99 கிலோ ஹான்ஸ் மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com