மகளிா் கல்லூரியில் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியல் துறை மாணவிகளுக்கு சொழில் முனைவுத் திறன் மேம்பாட்டு செயல்முறை விளக்கப் பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரியில் பயிலும் மாணவிகளிடையே தொழில் முனைவுத் திறனை மேம்படுத்தும் வகையில், சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் பயிலும் மாணவிகளிடையே தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ரெசின் கலைக்கான அடிப்படைசெயல்முறைகள், ரெசின் தயாரிப்பு, கலவை விகிதம், நிறம் சோ்த்தல், அலங்காரப் பொருள்களை பதித்தல், உறைப்படுத்தும் செயல்முறைகள், புகைப்பட பிரேம் எடிட்டிங் கருவிகளின் மூலம் டிஜிட்டல் பிரேம்களை வடிவமைத்தல் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கங்களுடன் மாணவிகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. 50-க்கும் மாணவிகள் பயிற்சியில் பங்கேற்று பயனடைந்தனா்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வரும், கணிதத் துறைத் தலைவருமான வி.எஸ்.செல்வி, உதவிப் பேராசிரியா் பி. விஷ்ணு பிரியா ஆகியோா் பேசினா்.

