மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை அமைத்துக் கொடுத்த காவல் ஆய்வாளா்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை அமைத்துக் கொடுத்த காவல் ஆய்வாளா்

Published on

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தனது சொந்த செலவில் கழிப்பறை அமைத்துக்கொடுத்த காவல் ஆய்வாளருக்கு எஸ்.பி. ப. சரவணன் வியாழக்கிழமை நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிபவா் அழகிரி. இவா் திருவெண்ணெய்நல்லூா் காவல் சரகத்துக்குள்பட்டதொட்டிக்குடிசை கிராமத்தில் வசிக்கும் 23 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தனது சொந்த செலவில் கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாா்.

தகவலறிந்த எஸ்.பி ப.சரவணன் காவல் ஆய்வாளா் அழகிரியின் மனிதநேயப் பணியைப் பாராட்டி, வியாழக்கிழமை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு பாராட்டு: கடந்த டிச. 4-ஆம் தேதி சென்னையைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா் கடத்தி வரப்பட்ட காரை விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே மடக்கி நடவடிக்கை மேற்கொண்ட விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து- 2 பிரிவு தலைமைக் காவலா்கள் இருவருக்கு எஸ். பி ப. சரவணன் நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com