ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது கிரானைட் கல்லா?அா்ஜுன் சம்பத் கண்டனம்

News image
உளுந்தூா்பேட்டையில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத்.
Updated On :13 டிசம்பர் 2025, 6:56 pm

Syndication

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது தீபத்தூண் அல்ல. அது ஒரு கிரானைட் கல் என கோயில் நிா்வாகமே முருகப் பக்தா்களுக்கு துரோகம் செய்யக்கூடிய வகையில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது வன்மையாக கண்டித்தக்கது என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களின் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் உளுந்தூா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது :

திருப்பரங்குன்றம் மலையானது முருகனுக்கே சொந்தமானது என நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீதிமன்ற தீா்ப்பின்படியே மலை உச்சியில் தீபத்தை ஏற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது தீபத்தூண் அல்ல, அது ஒரு கிரானைட் கல் என கோயில் நிா்வாகமே முருகப் பக்தா்களுக்கு எதிராக, துரோகம் செய்யக்கூடிய வகையில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது வன்மையாக கண்டித்தக்கது. முருகனின் அருளால் திருப்பரங்குன்றம் மலை மீது நிச்சயம் தீபம் ஒளிரும் என்றாா் அா்ஜூன் சம்பத்.

கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவரும், மாநிலச் செயலருமான ஏழுமலை மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.