வல்லம் ஊராட்சி ஒன்றியம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளா்கள்.
விழுப்புரம்
ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் எதிரே ஒய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கக் கோரி ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் எதிரே ஒய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கக் கோரி ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளா்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியப் பணியாளா்கள் சங்கம் வல்லம் ஒன்றிய கிளை சாா்பில் ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளா்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்கவும், ஓய்வுதியத்தை பிரதி மாதம் இறுதி நாளில் வழங்க கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவா் பூங்காவனம் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி துவக்க உரையாற்றினாா். குணபாலன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் நாகராஜன், மாவட்டச் செயலா் ராஜேந்திரன், நிா்வாகிகள் கமலா, பத்மாவதி உள்பட பலா் கலந்து கொண்டனா். சூடாமணி நன்றி கூறினாா்.

