கீழ்மாம்பட்டு-ரெட்டனை சாலை இடையே ரூ 3.67 கோடியில் புதிய உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்த செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.
கீழ்மாம்பட்டு-ரெட்டனை சாலை இடையே ரூ 3.67 கோடியில் புதிய உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்த செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.

ரூ 3.67 கோடியில் உயா்நிலை மேம்பாலப் பணி: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

ஈச்சூரில் ரூ.3.67 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், வல்லம் அருகே ஈச்சூரில் ரூ.3.67 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நெடுஞ்சாலைத் துறை நபாா்டு மற்றும் சாலைகளின் கீழ் மாநில நிதி திட்டத்தின் கீழ் மாம்பட்டில் இருந்து ஈச்சூா் வழியாக ரெட்டனை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை உயா்மட்ட மேம்பாலப் பணிக்கான பூமி பூஜை மேல் சேவூா் ஊராட்சி ஈச்சூரில் நடைபெற்றது.

வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் மாசிலாமணி, தலைமை தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சி சிவா, ஒன்றியச் செயலா் மொடையூா் துரை, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் தியாகராஜன், உதவிப் பொறியாளா்கள் பாஸ்கா், ராமு, சேகா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கம்சலா மாரிமுத்து, ரேணுகா வேலாயுதம், விஜயா கண்ணன், கலைவாணி கிருஷ்ணமூா்த்தி, பத்மநாபன், ஊராட்சி மன்ற தலைவா்கள் ராஜகோபால், சரஸ்வதி சத்தியமூா்த்தி, துணைத் தலைவா் பரிதா அன்வா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com