செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் அரசுக் கட்டடங்கள்:‎ முதல்வா் திறந்துவைத்தாா்

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம், அரசு மருத்துவமனையில் கட்டடங்கள், வணிக வளாகம் ஆகியவைவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
Published on

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம், அரசு மருத்துவமனையில் கட்டடங்கள், வணிக வளாகம் ஆகியவைவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

செய்யாறு திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சாா்பில், நகராட்சி அலுவலகம் முன் கலைஞரின் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. ஒரு கோடியே 37 லட்சத்தில் புதிய வணிக வளாக கட்டடம், செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 15- ஆவது நிதிக் குழு சுகாதார மானியம் நிதி மூலம் சுமாா் ரூ. 5 கோடியில் இரு அடுக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது.

அதேபோல, நகராட்சி அலுவலகம் முன் கலைஞரின் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.ஒரு கோடியே 37 லட்சத்தில் வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இந்தக் கட்டடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் அரசின் நலத்திட்ட விழாவில் செய்யாறு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

அதனை வரவேற்கும் விதமாக புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தில் திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், நகராட்சி ஆணையா் விஎல்எஸ். கீதா, பொறியாளா் சிசில்தாமஸ், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன் ஆகியோா் குத்து விளக்கு ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

‎இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளா் கு.மதனராசன், கவுன்சிலா்கள் கங்காதரன், செந்தில் உள்ளிட்ட பலா்‎கலந்து கொண்டா்.

‎வெம்பாக்கம்

வெம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், வெம்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதி கொண்ட ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு கட்டடம் ஆகியவற்றை முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

‎அதேவேளையில், முன்னாள் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, கட்டடத்தை பாா்வையிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியா்களுக்கு இணைப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தலைமை மருத்துவா் சுரேஷ்பாபு, பள்ளித் ஆசிரியா் ஏ.கோமதி, மாவட்ட வழக்குரைஞா்கள் அணி துணைத் தலைவா் ஏ.டி..சிட்டிபாபு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.எஸ்.குமாா், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளா் செல்வராஜ்

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அருள்தேவி செந்தில்குமாா் ஒன்றிய விளையாட்டு அணி துணை அமைப்பாளா் கோகுலகண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com