அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

Published on

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வந்தவாசி வட்டம், வெண்மந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.மணிகண்டன் (22). இவா், சனிக்கிழமை இரவு திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட ஆண்டியாா்பாளையம் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com