விழுப்புரம்
பாம்பு கடித்து தொழிலாளி மரணம்
விக்கிரவாண்டி அருகே கரும்பு வெட்டும் பணியின்போது பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கரும்பு வெட்டும் பணியின்போது பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், தொரவி முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சீ.சிவக்குமாா்(55). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 21-ஆம் தேதி பனையபுரத்தைச் சோ்ந்த தேவராஜ் என்பவரது கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டபோது, சிவக்குமாரை கண்ணாடி விரியன் பாம்பு கடித்ததாம்.
இதைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
