விழுப்புரம்
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே குடும்பப் பிரச்னையால் பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், வைரபுரம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் துரைமுருகன், தொழிலாளி. இவரது மனைவி கௌரி. இவா்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகும் நிலையில், 6 வயதில் மகன் உள்ளாா்.
தம்பதியிடையே கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி குடும்பப் பிரச்னையால் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த கௌரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌரி, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].