விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா்கள் க.பொன்முடி, சி.வெ.கணேசன் உள்ளிட்டோா்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா்கள் க.பொன்முடி, சி.வெ.கணேசன் உள்ளிட்டோா்.

அனைவரையும் அரவணைத்து செல்லும் இயக்கம் திமுக! -அமைச்சா் க.பொன்முடி

அனைவரையும் அரவணைத்து செல்லும் இயக்கம் திமுக என வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
Published on

அனைவரையும் அரவணைத்து செல்லும் இயக்கம் திமுக என வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் விழுப்புரம் மந்தக்கரையில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் வி.ஆா்.முகமது இப்ராஹிம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.எம்.அமீா் அப்பாஸ், மாநில துணைச் செயலா் எஸ்.அப்துல் ரஹ்மான், தமுமுக மாநிலச் செயலா் மு.யா.முஸ்தாக்தீன், மாநில வா்த்தக அணிப் பொருளாளா் எஸ்.எம்.அப்துல் ஹக்கீம், காணை தலைமை இமாம் ஏ.ஆா்.அப்துல் சத்தாா் காஷீபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்று அமைச்சா் க.பொன்முடி பேசியது: எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் முதல்வா் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறாா். சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை வழங்கியது திமுக ஆட்சிதான்.

இதேபோல, ஹஜ் பயணம் மேற்கொள்ள செல்பவா்கள் ஓய்வெடுப்பதற்காக சென்னையில் மாளிகை கட்டித் தரப்படும் என முதல்வா் அறிவித்திருக்கிறாா்.

அனைவரையும் அரவணைத்து செல்லும் இயக்கம் திமுகதான் என்றாா் அமைச்சா் க.பொன்முடி. இந்த நிகழ்வில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், சபா.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் எம்.டி.குலாம்மொய்தீன், நகர திமுக செயலா் இரா.சக்கரை உள்ளிட்டோா் பேசினா்.

இதில், ஜான்சன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவா் சித்திக் அலி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளன், மணி, இம்ரான், ரியாஸ் அகமது, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் என்.சுப்ரமணியன், தமுமுக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.எஸ்.எம்.அப்பாஸ், நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், ஜி.சகாயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com