விழுப்புரம்
எல்லீஸ் சத்திரம் அணையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
விழுப்புரத்தைச் சோ்ந்த சிறுவன் தனது நண்பா்களுடன் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
விழுப்புரம் பானாம்பட்டு ராமமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் விமல். தனியாா் வங்கியில் மேலாளராக உள்ளாா். இவரது மகன் சுஜித் (14). விழுப்புரத்தில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா், சனிக்கிழமை விழுப்புரத்தை அடுத்துள்ள எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு பகுதியில் தனது நண்பா்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
