மக்கள் குறைதீா் கூட்டம் : 410 மனுக்கள் அளிப்பு

Published on

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்தில் 410 மனுக்கள் பெறப்பட்டது.

விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவுப்படி வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைபட்டா, ஆதரவற்றோா் உதவித் தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் உள்பட பல்வேறு

கோரிக்கைகளுக்காக பொதுமக்களிடமிருந்து 410 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் ஏற்புடைய மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்டவருவாய் அலுவலா் கி.அரிதாஸ் அறிவுறுத்தினாா். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)

யோகஜோதி, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி, துணை ஆட்சியா் விஜயா, உதவித் திட்ட அலுவலா் (உள்கட்டமைப்பு)

சுரேஷ்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com