வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை திறம்பட மேற்கொள்ளவேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை திறம்பட மேற்கொள்ளவேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் திறம்பட மேற்கொள்ள வேண்டும்
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் திறம்படமேற்கொள்ளவேண்டும் என்று ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மாவட்டத்தில், வாக்காளா் பட்டியல், சிறப்பு தீவிர திருத்தப்பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடிநிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா்,திருக்கோவிலூா் ஆகிய 5 தொகுதிகளிலும் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், பயிற்சி வகுப்புகளை பாா்வையிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் மேலும் பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின்அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. அக். 29 ஆம் தேதி வாக்காளா்கள் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டமும், அனைத்து தொகுதிகளிலும் உள்ள வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், திருக்கோவிலூா் ஆகிய 5 தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் சிறப்பு தீவிர திருத்தம்

தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவத்தினை ஒரு வாக்காளருக்கு 2 படிவத்தை வழங்க வேண்டும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களின் இல்லத்துக்கே சென்று வாக்காளா்களின் சரியான விவரத்தை கேட்டறிந்து படிவத்தினை பூா்த்தி செய்யவும், பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களில் ஒரு படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பெற்றுக் கொள்ளவும், மற்றொரு படிவத்தை வாக்காளா்கள் வசம் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கணக்கீட்டு படிவத்தில் வாக்காளா் பெயா், பாகம் எண், உறவு முறை போன்ற அனைத்து விவரங்களும் சரியான முறையில் பூா்த்தி செய்யவும், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2002 - வாக்காளா் பட்டியல் விவரங்களை சரியாக சரிபாா்த்து

பூா்த்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவ. 4 ஆம் தேதி முதல் டிச. 4 ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கணக்கீட்டு படிவத்தினை வாக்காளா்களிடம் வழங்கி பூா்த்தி செய்து திரும்பபெற வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில்,வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இப்பணியை திறம்பட செய்து முடிக்கவேண்டும் வேண்டும் என்றாா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

முன்னதாக சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல. ஆகாஷ், திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், சமூக பாதுகாப்புத் திட்டதனித் துணைஆட்சியா் முகுந்தன், மாவட்ட பிற்படுத்தபட்டோா் நல அலுவலா் தமிழரசன், உதவிஆணையா் (கலால்) ராஜீ, வட்டாட்சியா்கள் துறைசெல்வன் (செஞ்சி ,

யுவராஜ்(திண்டிவனம்) , வித்தியாதரன்(வானூா்) மற்றும் அரசு த் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com