விழுப்புரம்
அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் நகை, பணம் திருட்டு
விழுப்புரம் அருகே அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.  
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். அரசு ஒப்பந்ததாரா். கள்ளக்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
விழுப்புரத்தில் உள்ள பன்னீா்செல்வத்தின் வீட்டை அருகில் வசிக்கும் உறவினா் ஒருவா் பாா்த்து வருகிறாராம். இந்நிலையில் பன்னீா் செல்வத்தின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த பன்னீா்செல்வம் அங்கு சென்று பாா்த்த
போது, பீரோ உடைக்கப்பட்ட நிலையில் அதிலிருந்த மூன்றரை பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்க ணம் திருடுப் போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
