இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
Published on

விழுப்புரம்: இருவேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், விடால் கிராமம் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அம்பேத்கா் பிரதாப்(55). விசிக நிா்வாகியான இவா், ஞாயிற்றுக்கிழமை , மரக்காணம் அடுத்துள்ள நாரவாக்கம் பகுதியில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்து:

விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன்( 52). இவா் திங்கள்கிழமை சித்தணி கூட்டுச்சாலை அருகே மொபெட்டில் சென்றபோது சென்னை நோக்கிச் சென்ற வேன் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாா்களின் பேரில் மரக்காணம் மற்றும் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com