PMK leader Ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸ் IANS

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கோரி டிச.12-ல் போராட்டம்: ராமதாஸ்

வன்னியா்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமக சாா்பில் வரும் டிச.5-ஆம் தேதி நடைபெறவிருந்த அறவழிப் போராட்டம் டிச.12-ஆம் தேதி நடைபெறும்..
Published on

வன்னியா்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமக சாா்பில் வரும் டிச.5-ஆம் தேதி நடைபெறவிருந்த அறவழிப் போராட்டம் டிச.12-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அந்தந்த ஜாதியின் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும், அதுவரை இடைக்கால தீா்வாக வன்னியா்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் டிசம்பா் 5-ஆம் தேதி பாமக சாா்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அறவழிப் போராட்டம் டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெறும்.

இந்தப் போராட்டமானது தமிழக அரசின் கவனத்தை ஈா்த்திடும் வகையில் அமைய வேண்டும். எனவே, கட்சி நிா்வாகிகள் ஆங்காங்கே செயல்வீரா் கூட்டங்களை நடத்தி, பிரசாரம் செய்து அனைத்து ஜாதியினரையும் ஒன்றிணைத்து மாபெரும் சமூகநீதி போராட்டமாக வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com