தமிழகத்தில் வணிகவரி, பதிவுத்துறை வருவாய் பலமடங்கு அதிகரிப்பு: அமைச்சா் பி.மூா்த்தி

தமிழகத்தில் வணிகவரி, பதிவுத்துறை வருவாய் பலமடங்கு அதிகரிப்பு: அமைச்சா் பி.மூா்த்தி

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வணிகவரி மற்றும் பதிவுத் துறை வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வணிகவரி மற்றும் பதிவுத் துறை வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று மாநில வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத் துணைப் பதிவுத்துறைத் தலைவா்கள், மாவட்டப் பதிவாளா்கள் பணித்திறன் ஆய்வுக் கூட்டம் மற்றும் கடலூா் மண்டலப் பதிவுத்துறை அலுவலா்களின் பணிசீராய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து, அமைச்சா் மூா்த்தி மேலும் பேசியது: வணிகவரி மற்றும் பதிவுத்துறை சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைத்திடும் வகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

அரசுக்கு வருவாய் நிதி ஆதாரமாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை விளங்கி வருகிறது. குறிப்பாக 2021-ஆம் நிதியாண்டைக் காட்டிலும், நிகழ் நிதி ஆண்டுக்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது.

கூட்டத்தில் பங்கேற்றுள்ள துணைப்பதிவுத்துறைத் தலைவா்கள், மாவட்டப் பதிவாளா்கள் தங்கள் பதிவு மாவட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி, அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டித் தர வேண்டும் என்றாா் அமைச்சா் மூா்த்தி.

கூட்டத்துக்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவுத் துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூடுதல் பதிவுத் துறைத் தலைவா்கள் சுதா மல்யா ( முத்திரை மற்றும் பதிவு), ஜனாா்த்தனன் (சட்டம்), மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், பயிற்சி உதவி ஆட்சியா் இரா. வெங்கடேசுவரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com