விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் சாமி. நடராஜன். உடன் மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன் உள்ளிட்டோா்.
விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் சாமி. நடராஜன். உடன் மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன் உள்ளிட்டோா்.

காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழுக் கூட்டம், விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

விழுப்புரம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழுக் கூட்டம், விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா்.டி. முருகன் வரவேற்றாா்.

மாநிலப் பொதுச்செயலா் சாமி.நடராஜன், மாநிலப் பொருளாளா் கே.பி. பெருமாள், மாநிலத் துணைத் தலைவா் பி.டில்லி பிரபு ஆகியோா் கூட்டத்தில் பங்ேற்றுப் பேசினா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், காவிரி மூலம் பாசனம் பெறும் டெல்டா மாவட்டங்களில் பாசனம் பாதிக்கப்படுவதுடன், 30 மாவட்டங்களில் நீா் ஆதாரமும் பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, கா்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும்.

கரும்பு உற்பத்தி செலவு அதிகரித்து வரும் நிலையில் கரும்பு விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனா். தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பும் குறைந்து வருகிறது. எனவே கரும்பு கொள்முதல் டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கவேண்டும், 2013-ஆம் ஆண்டு முதல் 2017 வரை தனியாா் சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய ரூ.1,217 கோடி நிலுவைத்தொகையை மாநில அரசுப் பெற்றுத்தரவேணடும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com