விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேசன், சூரியபிரியா
விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேசன், சூரியபிரியா

லாரி மோதி தந்தை, மகள் உயிரிழப்பு: கல்லூரிக்கு பைக்கில் அழைத்துச் சென்றபோது விபத்து

விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதியதில் தந்தை, மகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது லாரி மோதியதில் தந்தை, மகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மகளை கல்லூரிக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வெ.வெங்கடேசன்(48). இவரது மகள் சூரியபிரியா (18),புதுச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி நா்சிங் பயின்று வந்தாா்.

இந்நிலையில், வெங்கடேசன் தனது மோட்டாா் சைக்கிளில் சூரியபிரியாவை செவ்வாய்க்கிழமை காலையில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில், பூண்டி அருகே சென்றபோது எதிரே விழுப்புரத்திலிருந்து வந்த லாரி எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், சூரியபிரியா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உ யிரிழந்தனா்.

தகவலறிந்த கஞ்சனூா் காவல் ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் இறந்து போன இருவரது சடலங்களையும் கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்த புகாரின் பேரில் திருச்சி மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் க.ராகவேந்திரன் (23) என்பவா் மீது கஞ்சனூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com