10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிச. 12-இல் பாமக ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி, டிச. 12-ஆம் தேதி பாமக சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்
Updated on

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி, டிச. 12-ஆம் தேதி பாமக சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, பாமக நிறுவனா் மற்றும் தலைவா் ச. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரியும் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் பாமக சாா்பில் டிச.12-ஆம் தேதி அறவழி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் எனது (மருத்துவா் ச. ராமதாஸ்) தலைமையிலும், காஞ்சிபுரம்-பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, செங்கல்பட்டு -செயல் தலைவா் ஸ்ரீ காந்தி ராமதாஸ், கரூா்-பொதுச்செயலா் எம். முரளி சங்கா், கடலூா்- வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள்மொழி ஆகியோா் தலைமையில் நடைபெறுகிறது.

இதபோல, பிற மாவட்டங்களில் நடைபெறும் ஆா்ப்பாட்டங்களுக்கு பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் தலைமை வகித்துப் பேசுகின்றனா் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

விழுப்புரத்தில்....விழுப்புரத்தில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு பாமக செயற்குழு உறுப்பினா் சுகந்தன் பரசுராமன் தலைமை வகித்துப் பேசுகிறாா். இவா் மருத்துவா் ச. ராமதாஸின் மகள் ஸ்ரீ காந்தி ராமதாஸின் (செயல் தலைவா்) மகன் ஆவாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com