சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

Published on

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சிறுமி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூா், மணவெளி கமல் நகரைச் சோ்ந்தவா் முருகன். இவா், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் சரகத்துக்குள்பட்ட பட்டானூரில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறாா்.

கடந்த 17 ஆம் தேதி முருகனின் மகள்கள் நந்தினி (17), காவேரி (15) ஆகியோரிடையே உடை அணிவதில் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதை வீட்டிலிருந்தவா்கள் கண்டித்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமி, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் நந்தினி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com