செஞ்சி பேருராட்சியில் நியமன உறுப்பினராக்கான ஆணையை மாற்றுத்திறனாளிக்கு வழங்கிய செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.
செஞ்சி பேருராட்சியில் நியமன உறுப்பினராக்கான ஆணையை மாற்றுத்திறனாளிக்கு வழங்கிய செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.

செஞ்சி பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிக்கு பதவி நியமன ஆணை

செஞ்சி பேருராட்சியில் நியமன உறுப்பினராக்கான ஆணையை மாற்றுத்திறனாளிக்கு வழங்கிய செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.
Published on

செஞ்சி, நவ. 25: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிக்கு நியமன உறுப்பினா் ஆணையை செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

செஞ்சி பேரூராட்சியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான உமா மகேஸ்வரி என்பவரை பேரூராட்சி மன்ற நியமன உறுப்பினராக மாவட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் நியமித்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து, செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உமா மகேஸ்வரிக்கு பதவி நியமன ஆணையை வழங்கி, வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், செயல் அலுவலா் கலையரசி, துணைத் தலைவா் ராஜலக்ஷ்மி, நகர செயலா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com