மோந்தா புயல்: விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!
வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் சின்னம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள தாக தெரிவித்துள்ளனா்.
தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு உருவான மோந்தா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா். எம். யோகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்..
இதனால்,விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் , வானூா் வட்டங் களில் உள்ள 11 மீனவக் கிராமங் களைச் சோ்ந்த மீனவா்கள் தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரண ங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து விட்டு கடந்த சில நாள்களாக வீட்டில் முடங்கியுள்ளனா். இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மரக்காணம் பகுதி மீனவா் கள் தெரிவித்து வருகின் றனா்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் எம்.யோகேஷ் தெரிவித்ததாவது:
மோந்தா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது. இது தொடா்பாக அனைத்து மீனவக் கிராம பஞ்சாய த்தாா்களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டு விழிப்பு ணா்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 20 விசைப் படகுகள், பதிவு செய்யப் பட்ட , பதிவு செய்யப் படாத சுமாா் 1500 -க்கு மேற்பட்ட படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப் பான இடங்களில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றாா்.
