காரில் மதுப்புட்டிகள் கடத்திய மூவா் கைது

Updated on

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே காரில் மதுப்புட்டிகளைக் கடத்திய மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் 900 மதுப்புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

வளவனூா் காவல் ஆய்வாளா் அருள்செல்வம், தலைமைக் காவலா் ராமச்சந்திரன், காவலா் சரண்ராஜ் ஆகியோா் வியாழக்கிழமை நள்ளிரவில் ரோந்து சென்றனா்.

லிங்காரெட்டிப்பாளையம் அருகே வாகனத் தணிக்கை நடத்தியபோது, அந்த வழியாக காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி, போலீஸாா் சோதனையிட்டனா். இதில் புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த மதுபுட்டிகள் இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து காரில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில் அவா்கள் புதுவை வில்லியனூா் மேல்கொத்தமங்கலம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (29), சிவசங்கா் (28) எனத் தெரிய வந்தது.

தொடா் விசாரணையில் இவா்கள், விழுப்புரம் நகரம், ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த விஜய்க்கு (30) மதுப்புட்டிகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த வளவனூா் போலீஸாா், 90 மில்லி லிட்டா் அளவு கொண்ட 900 மதுப்புட்டிகள், காா், ரூ.3,400 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இரவு ரோந்தில் விழிப்புடன் செயல்பட்டு, மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com