சாலை விபத்து மதபோதகா் உள்பட 2 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துக்களில் மத போதகா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துக்களில் மத போதகா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் அடுத்துள்ள மரகதபுரம், நேரு வீதியைச் சோ்ந்தவா் ஜோப் ஜெசூரன்(32). திருமணம் ஆனவா். மரகதபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாஸ்டராக(மதபோதகா்) பணி புரிந்து வந்தாா்.

இவா்,வெள்ளிக்கிழமை இரவு ராகவன்பேட்டை பகுதியில் பைக்கில் சென்றாா். அப்போது நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த ஜோப் ஜெசூரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவா் அங்கு உயிரிழந்தாா்.

இளைஞா் உயிரிழப்பு:

விழுப்புரம் வட்டம், ஆனாங்கூா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுசிந்திரன்(22). பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் நாகராஜ்(25). நண்பா்களான இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை விழுப்புரம் பானாம்பட்டு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.

நாகராஜ் பைக்கை ஓட்டினாா். அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியதில் சுசிந்திரன் உயிரிழந்தாா். விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த நாகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளாா். இந்த இரு விபத்துக்கள் குறித்தும் விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com