பூட்டிய வீட்டில் தங்க நகைகள் திருட்டு

வானூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை மகா காளீஸ்வரா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு.காா்த்திக் (35). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மாடி வீட்டை பூட்டி வைத்து விட்டு, விக்கிரவாண்டி அருகேயுள்ள பாப்பனப்பட்டுக்கு சென்றுள்ளாா்.

பின்னா் பிற்பகலில் வீட்டுக்கு திரும்ப வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்கக் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் சங்கிலி, ஒரு பவுன் மோதிரம், ஒரு பவுன் கைச் சங்கிலி மற்றும் கால் கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com