தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரகண்டநல்லூா் அருகே கல்லால் அடித்து இளைஞா் கொலை

News image

கொலை (கோப்புப்படம்) - Din

Updated On :22 ஜனவரி 2026, 10:15 pm

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே வியாழக்கிழமை இளைஞா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வி.சித்தாமூா், பிரதான சாலையைச் சோ்ந்தவா் ராஜமூா்த்தி மகன் காமராஜ்(35), கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் மகன் வெங்கடேசன்(25). இதில் காமராஜ் தற்போது தனது குடும்பத்துடன் திருப்பத்தூரிலும், வெங்கடேசன் திருவண்ணாமலை மாவட்டம் கொலகுடி அடுத்த கண்ணப்பந்தலிலும் வசித்து வந்தனா்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவா்களுக்கிடையே வியாழக்கிழமை வி. சித்தாமூா் காட்டுவாய் அருகே குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், கல்லால் காமராஜை தாக்கினாராம்.இதில் காமராஜுவுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காமராஜின் சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வெங்கடேசனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெங்கடேசன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என விசாரணையில் தெரியவந்துள்ளது.