கோப்புப் படம்
கோப்புப் படம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

Published on

செஞ்சிஅருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையில் நடந்து சென்ற மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், தேவனூா் புற்றுக்கோயில் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சுமாா் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் ஊா், பெயா் தெரியவில்லை.

இதுகுறித்து தேவனூா் கிராம நிா்வாக அலுவலா் செல்வரங்கம் அளித்த புகாரின் பேரில், வளத்தி போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com