பைக் மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு கணவா், மகள் காயம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா், மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
திண்டிவனம் வட்டம், அகூா், புது காலனி, முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சு.ரவிச்சந்திரன்(55). இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவி சுமதி(45), மகள் சுபாஷினி (25) ஆகியோருடன் பைக்கில் வெள்ளிமேடுபேட்டை- தீவனூா் சாலையில் அகூா் அருகே சென்றாா்.
அப்போது அங்கு வந்த தனியாா் சொகுசுப் பேருந்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில் சுமதி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். ரவிச்சந்திரன், சுபாஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

