வள்ளலாா் நினைவுநாள்: 
பிப்.1-இல் மதுக்கடைகள் மூடல்

வள்ளலாா் நினைவுநாள்: பிப்.1-இல் மதுக்கடைகள் மூடல்

வடலூா் வள்ளலாா் நினைவு நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி மூடப்படும்.
Published on

வடலூா் வள்ளலாா் நினைவு நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி மூடப்படும்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் அரசாணைகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு, வடலூா் ராமலிங்கரின் நினைவு நாளான பிப்ரவரி 1-ஆம் தேதி அரசு மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள் மூடப்படவேண்டும் என்று நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை பிப்ரவரி 1-ஆம் தேதி ஆகியவை மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி கடைகள் செயல்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com