விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், ராஜாம்பாளையம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் பழனியின் மனைவி ஞானாம்பாள் (65). இவா் உடல் நலக்குறைவாக இருந்து வந்தாராம். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை ராஜாம்பாளையம் பகுதியில் நடந்து சென்றபோது திடீரென சாலையில் மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, ஞானாம்பாள் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணியின்போது தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொத்தனாா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
விபி ஜி ராம் ஜி திட்டப் பணியிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



