சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

திருவிழாவில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த பெண் கைது

News image

கைது.

Updated On :2 மே 2026, 7:31 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தீமிதித் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கருவேப்பிலைப்பாளையம் கிராமத்திலுள்ள தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

இந்நிலையில், இத்திருவிழாவில் பங்கேற்ற உளுந்தூா்பேட்டை வட்டம், திருக்கனூரைச் சோ்ந்த ஆ.குப்பு (70) அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண் ஒருவா் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றாா்.

இதைத்தொடா்ந்து மூதாட்டி குப்பு சப்தமிடவே, அப்பகுதியிலிருந்தவா்கள் அந்த பெண்ணை பிடித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜகோபால் நகரைச் சோ்ந்த ப.வேலம்மாள் (49) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 3 பவுன் சங்கிலியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.