புதுச்சேரியில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன்(25).இவா், கதிா்காமம் பகுதியைச் சோ்ந்த 15 வயதுடைய சிறுமியை அண்மையில் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.
இது குறித்து புதுவை மாநிலக் குழந்தைகள் நலக் குழுவினா் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் இச்சம்பவம் உண்மையென தெரியவந்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீஸாா் மணிகண்டன் மீது குழந்தைத் திருமணம் தடைச்சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு

கருவேல மரங்கள் வெட்டிக் கடத்தல்: 15 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


