சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ரூ.500 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஊழியர் சங்கத் தலைவருமான சௌ.மனோகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகரில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
தேர்தல் நடத்தி வெற்றி பெற்ற எனது தலைமையிலான அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துடன் இணைந்த ஆசிரியர் சங்கங்கள் கொண்டதுதான் புதிய கூட்டு நடவடிக்கைக்குழு (ஒர்ண்ய்ற் அஸ்ரீற்ண்ர்ய் இர்ன்ய்ஸ்ரீண்ப்) கூட்டமைப்பு. பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் ஆசிரியர், ஊழியர்கள் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. பணப்பயன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதால், கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தலைமை அலுவலகம் முன்பு செப்.25}ல் நாங்கள் சிறப்பு கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் வைத்திருந்தோம்.
இந்நிலையில், இரு கூட்டத்துக்கும் காவல்துறை தடை விதித்துள்ளது. இவற்றை முறியடித்து எனது தலைமையிலான கூட்டு நடவடிக்கைக்குழு தொடர்ந்து பல்கலைக்கழக நலனுக்காக பாடுபடும் என சௌ.மனோகரன் தெரிவித்தார். அப்போது கூட்டு நடவடிக்கை குழு இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.எஸ்.குமார், ஆர்.செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.