ஆளுநர் வருகையை முன்னிட்டு, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக ஆளுநர் கே.ரோசய்யா செப்.27-ம் தேதி பண்ருட்டிக்கு வருகிறார். அங்கு இலவச காப்பீட்டு அட்டை வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு, ஆளுநருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உயர்மட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் ஆளுநருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணத்திட்டமிடல், விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராமசாமி, கோட்டாட்சியர்கள் என்.உமாமகேஸ்வரி, செந்தில்குமார் மற்றும் மருத்துவம், வருவாய்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

