நெய்வேலி 21, 30-ஆவது வட்டங்களில் எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் என்எல்சி அதிகாரிகளுடன் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தார்.
நெய்வேலி வட்டம் 21, 30 ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரனை சந்தித்து தங்களது பகுதியில் சாலை, வடிகால் வசதிகள் இல்லை எனவும், கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர், என்எல்சி நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளுடன் அந்தப் பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்தப் பகுதி மக்கள் வடிகால் வசதி இல்லை எனவும், இருக்கும் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கழிவு நீர் தேங்கி, கொசுகள் உற்பத்தியாவதாகவும், சாலை வசதிகள் சரியாக இல்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றித் தர வேண்டும் என என்எல்சி அதிகாரிகளை எம்எல்ஏ. சபா. ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.
திமுக நகரப் பொறுப்புக் குழு பக்கிரிசாமி, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நன்மாறபாண்டியன், நடராஜன், செந்தில், இளங்கோ, கருப்பன், தொமுச நிர்வாகிகள் சுப்பையா, புண்ணியமூர்த்தி, பகுதி நிர்வாரிகள் ஜோதி, கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.