தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
2017-ஆம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின், கடலூர் மாவட்ட மாநாடு நிலைப்புறு மேம்பாட்டுக்கான "அறிவியல் தொழில்நுட்பம் - புத்தாக்கம்' என்ற


2017-ஆம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின், கடலூர் மாவட்ட மாநாடு நிலைப்புறு மேம்பாட்டுக்கான "அறிவியல் தொழில்நுட்பம் - புத்தாக்கம்' என்ற தலைப்பில், கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் கே.ராமமூர்த்தி தலைமை வகித்தார். புனித வளனார் பள்ளி தலைமையாசிரியர் வி.ஆக்னல் வாழ்த்துரை வழங்கி, மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.சேதுராமன், டிஎன்எஸ்எப் மாநிலச் செயலர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், ஜி.முனுசாமி, மாவட்டச் செயலர் ஆர்.தாமோதரன், துணைத் தலைவர் எஸ்.விக்டர் ஜெயசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கடலூர் கிளைச் செயலர் ஏ.பீட்டர் ஆரோக்கிய அமல்ராஜ் வரவேற்றார்.
மாநாட்டில் 56 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன. 300 குழந்தை விஞ்ஞானிகளும், 56 வழிகாட்டி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 15 நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட 6 ஆய்வுகள் சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
மாநில மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட குழந்தை விஞ்ஞானிகளுக்கு மாநில வரி அலுவலர் என்.ஜனார்த்தனம் பரிசுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தை விஞ்ஞானிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் 25-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.உதயேந்திரன் மாநாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயவீரபாண்டியன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...