வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நவ. 21-இல் ஆர்ப்பாட்டம் நடத்த  விவசாயிகள் சங்கம் முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி, பண்ருட்டி பொதுப் பணித் துறை அலுவலகம் எதிரே நவம்பர் 21-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:27 am

தினமணி

கோரிக்கைகளை வலியுறுத்தி, பண்ருட்டி பொதுப் பணித் துறை அலுவலகம் எதிரே நவம்பர் 21-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியக் குழுக் கூட்டம், பண்ருட்டியில் உள்ள அதன் சங்க அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விவவசாயிகள் சங்க உறுப்பினர் சி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அதன் மாவட்டச் செயலர் ஜி.மாதவன், ஒன்றியச் செயலர் டி.ஜெகதீசன், தலைவர் பி.ஞானசேகர், பொருளாளர் பி.குமரகுருபரன், துணைத் தலைவர் எம்.பழனிவேல் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில், சாத்தனூர் அணை நீரை திருக்கோவிலூர் அணையில் இருந்து மலட்டாறு வழியாகக் கொண்டு வந்து நத்தம் முதல் சிறுவத்தூர் வரையில் உள்ள 15 ஏரிகளில் தண்ணீர் திறந்து, சம்பா சாகுபடி செய்யப்பட்ட 10 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்களைப் பாதுகாக்க வேண்டும். திருக்கோவிலூர் அணைக்கட்டு முதல் அரசூர் வரை மலட்டாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முந்திரி, பலா கன்றுகள், உரம், உளுந்து விதை வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்து, குறுகிய காலக் கடனை நீண்ட காலக் கடனாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 21-ஆம் தேதி பண்ருட்டி பொதுப் பணித் துறை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.